odi odi utkalantha jothiyai ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
சிவவாக்கியம் பாடல்கள் சிவவாக்கிய சித்தர் ஆல் எழுதப்பட்டது இப்பதிவில் நாம் முக்கியமான சிவவாக்கிய பாடல்களைக் காண்போம். அதை pdf பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய ஓம் நம : சிவாய ஓம் ஓம் நம : சிவாய சரியை விலக்கல் ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) ஞான நிலை என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்துகொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே ( ஓம் ) இதுவுமது நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமே ( ஓம் ) யோக நிலை அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ( ஓம்) விராட்சொரூபம் இடது கண்கள்